சரியான பாவ அறிக்கை
ஆயர் பால் சி. ஜோங்
【5-1】< 1 யோவான் 1:9 > உண்மையானதும் சரியானதுமான பாவ அறிக்கைச் செய்வது எப்படி?
< 1 யோவான் 1:9 >
“நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா
அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்தீகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராய்
இருக்கிறார்.”
இரத்தத்தைக் குறித்த நற்செய்தி
அரை நற்செய்தியாகும்
- இரத்தம்
குறித்த
நற்செய்தியால்
மட்டும்
நாம்
பரலோக
ராஜ்ஜியத்திற்குள்
பிரவேசிக்க
முடியுமா?
- இல்லை.
நாம்
முழு
நற்செய்தியையும்
நம்பவேண்டும்.
(நற்செய்தியாகிய
நீர்
மற்றும்
ஆவி)
1 யோவான் 1:9 நீதிமான்களுக்கு மட்டும் பொருத்தமாயிருக்கிறது. பாவ விடுதலையடையாத ஒரு பாவி
இந்த வசனத்திலுள்ள சொற்கள் பிரகாரம் தினந்தோறும் செய்யும் பாவத்திற்கு பாவ மன்னிப்பு
பெறும்முயற்சியாக அவன் தவறான செய்கைகளை பாவ அறிக்கை செய்தானானால் அவன் பாவங்கள்
மன்னிக்கப்படாது. நான் இங்கு என்ன கூறுகிறேன் என்று நோக்குகிறீர்களா? இவ்வசனம் மறுபடியும்
பிறவாத பாவிகளுக்கு பொருந்தாது.
இவ்வுலகிலுள்ள நிறைய பேர் இன்னும் மறுபடியும் பிறக்காதவர்கள். ஆனால் அவர்கள் 1 யோவான் 1 ஆம்
அதிகாரத்திலுள்ள இவ்வசனத்தை எடுத்துக்கொண்டு பாவ மன்னிப்பு கிடைக்குமென நம்பி ஜெபித்து தம்
பாவங்களுக்காக புலம்புகிறார்கள்.
மறுபடியும் பிறக்காத ஒருவன் ஜெபத்தினாலும் பாவ ஆறிக்கைச் செய்வதாலும் முற்றிலுமாக
பாவத்திலிருந்து விடுதலையடைய முடியுமா? இது மிக முக்கியமான கருத்து. இதனைக் கருத்தில்கொண்டு
மேல் விபரங்களுக்கு செல்லுமுன்னால் அலசி ஆராய்வோம்.
1 யோவானை வாசிக்கும் முன், அப்போஸ்தலனாகிய யோவான் நீதிமானா அல்லது பாவியா என்று நீ
தீர்மானிக்க வேண்டும். நான் உன்னிடம் கீழ்க்கண்ட கேள்வியைக் கேட்கட்டும். அப்போஸ்தலனாகிய யோவான்
நற்செய்தியாகிய நீரையும் ஆவியையும் விசுவாசித்து மறுபடியும் பிறந்த நீதிமானா? அல்லது அவன் ஒரு
பாவியா?
அப்போஸ்தனாகிய யோவான் ஒரு பாவியென்று நீங்கள் கருதினால் வேதாகமத்தைப் பொருத்தவரை உங்கள்
நம்பிக்கை சரியல்ல. அப்போஸ்தலனாகிய யோவான் இயேசுவை விசுவாசித்தபோது மறுபடியும் பிறந்த நீதிமான்
என்றால், அவன் நம்பிக்கை உங்கள் விசுவாசத்திலிருந்து மாறுபட்டது என்பது தெளிவாகிறது. உங்களுடைய
விசுவாசம் அப்போஸ்தலனாகிய யோவானின் விசுவாசத்தைப் போலிருக்க வேண்டும்.
நான் உங்களிடம் இன்னுமொரு கேள்வியைக் கேட்கட்டும். அப்போஸ்தலனாகிய யோவான் இந்நிருபங்களை
நீதிமான்களுக்காக எழுதினானா? அல்லது பாவிகளுக்காக எழுதினானா? யோவான் இந்நிருபங்களை
நீதிமான்களுக்கு எழுதினான்.
ஆகவே மறுபடியும் பிறக்காத பாவிகள் 1 யோவான் 1:8-9 ஐ சுட்டிக்காட்டி அதனைத்
தங்களுக்கானதாக்கிக் கொண்டார்களானால் அது தவறாகும். நீங்கள் நீதிமான்களாக வேண்டுமானால் உங்கள்
பாவங்களை இறைவன் முன்பாக அறிக்கையிட்டும், நற்செய்தியாகிய நீரையும் ஆவியையும் விசுவாசிக்கவும்
வேண்டும். அப்பொது கர்த்தர் நற்செய்தி மூலமாக உங்களைக் கழுவுவார். அந்நற்செய்தியானது ஏற்கெனவே
இவ்வுலகின் பாவங்களைக் கழுவியுள்ளது.
அப்போஸ்தலனாகிய யோவானின் நம்பிக்கை இத்தகையது. 1 யோவான் 5 ஆம் அதிகாரத்தில் அவன் “நீர், இரத்தம்
மற்றும் ஆவியானவர்” மீது நம்பிக்கையுடனிருப்பதாகக் கூறுகிறான்.
நீர், இரத்தம் மற்றும் ஆவி ஆகியவற்றின் மூலம் வந்த இயேசுவை நீ விசுவாசிக்கிறாயா? இயேசுவின்
சிலுவையை நீ நம்புகிறாயா அல்லது அவரின் ஞானஸ்நானம், அவரின் இரத்தம் மற்றும் ஆவியினால் வந்த
இயேசுவை நீ நம்புகிறாயா?
உன்னால் நற்செய்தியாகிய இரத்தத்தை மட்டும் நம்பி பரலோக ராஜ்ஜியத்திற்குள் நுழைய முடியுமா?
உன்னுடைய நம்பிக்கை நற்செய்தியாகிய இரத்தத்தின் மீது மட்டுமேயிருந்தால் நீ அரைவாசி நற்செய்தியை
மட்டுமே புரிந்துக் கொண்டிருக்கிறாய். சிலுவை இரத்தத்தை மட்டும் நீ விசுவாசித்தால் தினந்தோறும்
பாவ மன்னிப்புக்காய் நீ ஜெபித்துக் கொண்டிருப்பாய் என்பதில் சந்தேகமில்லை. உன் பாவங்களை ஜெபம்
மூலமும், மனம் வருந்துதல் மூலமும் கழுவலாம் என்று நம்புவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
ஆனால் சிலுவை இரத்தத்தை மட்டும் நம்புவதாலும் மனம் வருந்தி அந்நாளுடைய பாவங்களின்
பாவமன்னிப்புக்காக ஜெபிப்பதாலும் உன் பாவங்கள் கழுவப்பட்டுவிடுமா? நீ இத்தகைய மனிதர்களில்
ஒருவனாக இருந்தால் உன் இருதயத்தில் இன்னும் பாவங்களிருக்கின்றன, ஏனெனில் ஒருவனாலும் சிலுவை
இரத்தத்தை மட்டுமே விசுவாசிப்பதன் மூலமும், தினமும் மனம் வருந்தி ஜெபிப்பதாலும் தன் பாவங்களைக்
கழுவ முடியாது. நீ அவர்களில் ஒருவனானால் உனக்கு நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிக்குறித்து
இன்னமும் தெரியாது. உனது விசுவாசம் நிறைவானதல்ல.
அப்போஸ்தலனாகிய யோவான் மறுபடியும் பிறந்தவன், எப்படியெனில் அவன் நற்செய்தியாகிய நீர்,
இரத்தம் மற்றும் ஆவியாகியவற்றை விசுவாசித்தான். நற்செய்தியைக் குறித்த சரியான கருத்து
உங்களுக்கே இல்லாவிட்டால், மற்றவர்களை இரட்சிப்பின் வழியில் நடத்த உங்களால் எப்படி முடியும்?
நீங்களே மறுபடியும் பிறவாதவர்கள். மனம் வருந்தி ஜெபிப்பதால் உங்கள் பாவத்திலிருந்து மன்னிப்பு
பெற முயற்சிக்கிறீர்கள். இப்பாதை உங்களை எங்கும் கூட்டிச் செல்லாது.
ஒருவன் எவ்வளவாய் மனம் வருந்தி ஜெபித்தாலும் அவன் பாவங்களை அவன் இருதயத்திலிருந்து கழுவ
இயலாது. சில நேரங்களில் உங்கள் பாவங்கள் கழுவப்பட்டுவிட்டதாக நீங்கள் உணர்ந்தால் அது உங்கள்
கற்பனையும் உணர்வுகளின் வல்லமையுமாய் இருக்கிறது. நீங்கள் மனம் வருந்தி ஜெபித்தால் இரண்டொரு
நாட்களுக்கு புத்துணர்வு பெற்றதுபோல் தோன்றும். ஆனால் இம்முறையில் உங்கள் பாவங்களிலிருந்து
நிரந்தர விடுதலை உங்களுக்கு கிடைக்காது.
பாவிகள் தங்கள் பாவங்களிலிருந்து இரட்சிக்கப்படும்படி விரும்பி மனம் வருந்தி
ஜெபிக்கிறார்கள். அதனாலேயே அவர்கள் இயேசுவை வெகு காலமாக விசுவாசித்திருந்தாலும் பாவியாகவே
இருக்கின்றனர். அவர்களுக்கு நற்செய்தயாகிய நீர் மற்றும் ஆவி குறித்து தெரியாது. நீங்கள் இயேசுவை
நம்பினாலும் இது வரை மறுபடியும் பிறவாதவராக இருந்தால் நீங்கள் இந்த மக்களில் ஒருவராவீர்கள்.
தினந்தோறும் உங்கள் பாவங்களுக்கு மன்னிப்பு கிடைக்கும்படி மனம் வருந்தி ஜெபித்துக்
கொண்டிருந்தீர்களானால், நீங்கள் மறுபடியும் பிறக்காததற்கு இதுவே சாட்சியாகும். அப்போஸ்தலனாகிய
யோவானின் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நம்புவதா இல்லை உங்கள் யோசனைகள் மீதும் உணர்வுகள்
மீதும் நம்பிக்கை வைப்பதா என்பது குறித்து தீர்மானிக்கவேண்டும். ஒன்று தெளிவான உண்மை, மற்றது
உண்மையல்ல.
பரிசுத்த வேதாகமத்தைப் பொருத்தவரை உண்மையான நற்செய்தியானது இயேசு ஞானஸ்நானம் பெற்று
ஒரேயடியாக இவ்வுலகின் பாவங்கள் அனைத்தையும் சுமந்து தீர்த்து எல்லா பாவிகளுக்குமான தீர்ப்பையும்
சிலுவையில் பெற்றார். இயேவின் ஞானஸ்நானத்தையும் அவரின் சிலுவை மரணத்தையும் யாரேனும் நம்பினால்
அவனுடைய பாவங்களிலிருந்து அவன் உடனடியாக இரட்சிக்கப்படுகிறான். அதே வேளையில் யாரொருவன் மனம்
வருந்தி ஜெபிப்பதால் தனது மீறுதல்களை கழுவ முயல்கிறானோ அவன் எப்போதும் தன் பாவங்களிலிருந்து
விடுதலயடைவதில்லை. நீங்கள் மனம் வருந்தாத பாவங்களை கர்த்தர் சட்டைப்பண்ணுகிறாரா? நாள்தோறும்
செய்யும் பாவங்களுக்கு மனம் வருந்தி ஜெபிப்பது நல்ல தீர்வாகுமா? இந்த கேள்விகளுக்கான ஒரே பதில்,
இல்லை.
உண்மையாக மனம் வருந்துதலும் பாவ அறிக்கையின் நோக்கமும்
- பாவ அறிக்கை மற்றும்
நற்காரியங்கள் ஆகியவற்றின் எல்லையென்ன?
- நாம் நம்
வாழ்நாள் முழுவதும் பாவ அறிக்கை செய்யவேண்டியவர்களாக இருந்தாலும், நமது மீறுதல்களை
அறிக்கைச் செய்வதாலும் நல்ல காரியங்களைச் செய்வதாலும் நிச்சயமாக நாம் இரட்சிப்படைய
முடியாது.
வேதாகமத்தில் மனம் வருந்துதல் என்பது தவறான
விசுவாசத்திலிருந்து சரியான விசுவாசத்திற்கு திரும்புவது என்பதும் நீதிமான் ஆவதுமாகும். ஒருவன்
தன் தவறான செய்கைகளிலிருந்து நற்செய்தியாகிய வெளிச்சத்திற்கு திரும்ப வருவதாகும்.
நீங்கள் இப்போது ஒரு பாவி என்றால், கீழ் கண்டதுபோல்
பாவ அறிக்கை செய்யவேண்டும்: “அன்பான கர்த்தரே, நான் பாவம் செய்தேன். நான் நரகத்திற்கு
செல்லவேண்டியவன். நான் என் பாவங்களிலிருந்து இரட்சிப்படைய காத்திருக்கிறேன். என்னுடைய எல்லாப்
பாவங்களிலிருந்தும் என்னை இரட்சியும். நான் இன்னும் மறுபடியும் பிறந்தவனில்லை. நான் நரகத்திற்கு
செல்லவேண்டியவன் என்று எனக்குத் தெரியும்” இதுவே சரியான பாவ அறிக்கையாகும்.
அப்படியானால் மறுபடியும் பிறந்தவன் எப்படி பாவ
அறிக்கைச் செய்யவேண்டும்? “அன்பான கர்த்தரே, என் மாமிச இச்சையின்படி பாவம் செய்தேன். இயேசு
யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் பெற்றதனை நான் விசுவாசித்து என் எல்லாப் பாவங்களிலிருந்தும்
இரட்சிக்கப்பட்டேன். அதனில் நான் இப்போது செய்த பாவமும் அடங்கும். என்னுடைய பாவங்களுக்காக நான்
மரிக்கவேண்டியவன். அவர் நீராலும் இரத்தத்தாலும் என்னை இரட்சித்ததால் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்”
மறுபடியும் பிறந்தவரின் பாவ அறிக்கைக்கும் மறுபடியும் பிறக்காதவரின் பாவ அறிக்கைக்கும்
வித்தியாசம் இருக்கிறது.
அப்போஸ்தலனாகிய யோவானைப் போன்ற விசுவாசம் நம்
அனைவருக்கும் வேண்டும். நீதிமான்களுக்கான பாவ அறிக்கையில் உன் பாவங்களை மறைப்பதற்கு முயற்சி
செய்தால், பாவத்தின் சம்பளமான மரணத்திலிருந்து நீ எப்போதும் இரட்சிக்கப்படமாட்டாய்.
மறுபடியும் பிறவாத பாவிகள் அனைவரும் பாவ அறிக்கை
ஜெபத்திற்கு பின்னால் ஒளிவதை நிறுத்தவேண்டும். அவர்கள் உண்மையான நற்செய்தியாகிய நீர், இரத்தம்
மற்றும் ஆவி குறித்து நம்பத்தொடங்கவேண்டும். அவர்கள் அப்போஸ்தலனாகிய யோவானின் விசுவாசத்தைக்
கற்று அதனால் இரட்சிப்பை சம்பாதிக்கவேண்டும்.
பாவிகள் தம் பாவங்களுக்கான தீர்ப்பு எத்தனை
பயங்கரமானது என்பதை உணரவேண்டும். கர்த்தருக்கு முன்பாக நாம் செய்யும் பாவங்களில் மிகவும்
கொடூரமானது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்காததாகும்.
£இயேசுவை யாரெல்லாம் விசுவாசிக்கிறார்களோ, அவர்கள்
தொடர்ந்து மறுபடியும் பிறவாதவர்களாக இருந்தால் கர்த்தர் முன்பு பாவ அறிக்கைச் செய்யவேண்டும்.
“கர்த்தரே, நானொரு பாவி. நரகத்தின் பற்றியெரிகிற நெருப்பில் தூக்கி எறியப்பட வேண்டியவன்.” என்று
ஜெபிக்கவேண்டும். “கர்த்தரே, தயவுசெய்து என் பாவங்களை கழுவும் “ என்று அவர்கள் கூறுவதைத்
தவிர்க்கவேண்டும். ஒரு பாவியானவன் இயேசு தன்னை அவர் யோர்தானின் ஞானஸ்நானம் மூலமும் அவரின்
சிலுவை இரத்தம் மூலமும் இரட்சித்தார் என்ற நற்செய்தியை தன் இருதயத்தில் ஏற்றுக்கொண்டால் அவன்
தன் பாவங்கள் அனைத்திலிருந்தும் விடுதலயடையலாம். கர்த்தர் முன்பாக தன் பாவங்களிலிருந்து
விடுதலயடைய வேண்டுமானால் இத்தகைய பாவ அறிக்கையை பாவிகள் செய்யவேண்டும்.
ஒரு பாவியானவன், மறுபடியும் பிறவாதது குறித்து
மட்டுமே பாவ அறிக்கைச் செய்யவேண்டும். மேலும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து
விசுவாசிக்கவேண்டும். அப்பொழுது அவன் முற்றிலுமாக இரட்சிக்கப்படுகிறான். நற்செய்தியாகிய நீர்
மற்றும் ஆவியால் எல்லா பாவிகளினதும் இரட்சிப்பானது நிறைவாயிற்று. “அவராலேயன்றி
வேரொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும்,
மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேரொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.'
(அப்போஸ்தலர் 4:12) யோவான் ஸ்நானன் இயேசுவிற்கு செய்வித்த
ஞானஸ்நானத்தினாலும் அவர் சிலுவையில் மரித்ததாலும், கர்த்தர் எல்லா பாவிகளையும் அவர்கள்
பாவத்தினின்று இரட்சித்தார்.
மனிதர்கள் தங்கள் மாமிசத்தினாலும் இதயத்தினாலும்
அவர்கள் பிறப்பிலிருந்து இறப்புவரை செய்த எல்லாப் பாவங்களையும் கர்த்தர் கழுவிப்போட்டார்.
இரட்சிக்கபடும்படியாக உண்மையான நற்செய்தியை நாம் நம்பவேண்டும். இவ்வழியின் மூலமாகவே நம்
பாவங்களிலிருந்து விடுதலைப் பெற்று உண்மையாக பரிசுத்தமடைய முடியும். நாம் உண்மை நற்செய்தியாகிய
நீர் மற்றும் ஆவியைக்குறித்து விசுவாசிப்பதன் மூலம் உடனடியாக நீதிமானாகலாம்.
இயேசு ஞானஸ்நானம் பெற்றார். உலகின் பாவங்களை
சுமந்து தீர்த்தார், தம் ஜீவனின் மூலம் சிலுவையில் கிரயம் செலுத்தினார், மூன்றாம் நாள் உயிரோடு
எழும்பினார். இப்பொழுது கர்த்தரின் வலது பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். இதுவே மிகச் சிறந்த
உண்மையாகும்.
நாம் இந்த பாவ அறிக்கையை செய்யவேண்டும். “கர்த்தரே,
நான் மரிக்கும் வரை பாவம் செய்வதை தவிர்க்க இயலாது. என் தாயின் கர்ப்பத்திலிருந்து பாவத்தால்
பிறந்தேன். நான் செய்த எல்லாப் பாவங்களையும் சேர்த்தால், நான் பற்றியெரிகிற நரகத்தின்
அக்கினியில் தூக்கியெறியப்பட வேண்டியவன். இந்த காரணம் பற்றி நீராலும்; இரத்தத்தாலும் ஆவியாலும்
வந்த இயேசுவை நான் விசுவாசிக்கவேண்டும். அவரே எனது இரட்சகரானார்.”
மத்தேயு மூன்றாம் அதிகாரத்தில்
எழுதப்பட்டுள்ளதுபோல், இயேசு யோர்தான் நதியில் ஞானஸ்நானம் பெற்றபோது நம் மரணம் வரை நாம்
செய்யும் பாவங்களையெல்லாம் இவ்வுலகின் பாவங்களோடு சேர்த்து எடுத்துப்போட்டார்.
“சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலயாக்கும் என்றார்.” (யோவான்
8:32)
இயேசு நம்மை, நம் மூல பாவங்களிலிருந்து மட்டும்
இரட்சித்து, உங்களுடைய பாவங்களை நீங்களே தீர்த்துக்கொள்ளுங்கள் எனக் கூறியிருந்தால் நாம்
தொடர்ச்சியான மன வருத்த்துடன் இருப்போம். ஆனால் இயேசு தம் ஞானஸ்நானம் மூலமும் தம் இரத்தத்தின்
மூலமும் நம்மை சகல பாவங்களிலிருந்தும் விடுதலையாக்கினார். நாம் எதற்காக கலங்க வேண்டும்? நாம்
இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் சிலுவை இரத்தத்தையும் விசுவாசித்தால், ஆவியானவர் நமது
இதயத்தில் வாசம் செய்வார். கர்த்தருக்கு நன்றிகள்.
இயேசுவை விசுவாசிக்கிறாயா? ஆவியானவர் உன்னுள்
சஞ்சரிப்பதை நம்புகிறாயா? அவரின் ஞானஸ்நானம் மூலம் உலகின் பாவங்களையெல்லாம் அவர் தம்மீது
ஏற்றுகொண்டபோது உன் பாவங்கள் இயேசுவுக்குள் இடமாற்றம் செய்யப்பட்டன. பிறகு நம்முடைய
பாவங்களுக்காக சிலுவையில் தீர்க்கப்பட்டார். நம்மை நித்திய அழிவிலிருந்து விடுதலைச் செய்தார்.
இதுவே உண்மையான நற்செய்தி.
நீதிமான்களின் பாவ அறிக்கை.
- நீதிமானின் உண்மையான
பாவ அறிக்கை என்ன?
- அவர்கள்
தினமும் பாவம் செய்வதாக பாவ அறிக்கைச் செய்யவேண்டும். ஆனால் தங்களுடைய தினப் பாவங்கள்
2000 வருடங்களுக்கு முன்பு இயேசுவால் கழுவப்பட்டது என்பதை
விசுவாசிக்கவேண்டும்.
1 யோவான்1:9 கூறுகிறது, “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை
நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மை சுத்தீகரிப்பதற்கு அவர் உண்மையும்
நீதியும் உள்ளவராய் இருக்கிறார்.” இதன்பொருள் என்னவென்றால் யாரேனும்
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக்குறித்து விசுவாசிக்க முடிவு செய்தால் அவன் கண்டிப்பாக பாவ
அறிக்கைச் செய்யவேண்டும். “கர்த்தரே, என்னுடைய வாழ்க்கையில் பாவம் செய்வதை தவிர்க்க முடியாது.
அதே நேரம் ஜெபத்தினாலும், பாவ மன்னிப்பினாலும் நான் இரட்சிப்படைய முடியாது என்பதும் தெரியும்.
பாவத்தின் சம்பளம் மரணம் என்பதை விசுவாசிக்கிறேன். இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் சிலுவை
மரணத்தையும் தவிர மீதி எதனாலும் என்னை பாவங்களிலிருந்து இரட்சிக்கமுடியாது. இன்று நான் பாவம்
செய்ததாக பாவ அறிக்கைச் செய்கிறேன். ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இன்று நான் செய்த
பாவங்களையும் இயேசு ஏற்கெனவே கழுவிவிட்டார் என்பதை விசுவாசிக்கிறேன்.” இப்படிப்பட்டவர்கள்
இந்தப் படியாக ஜெபித்தார்கள் என்றால் அவர்கள் மனசாட்சியை உறுத்திக் கொண்டிருக்கும் பாவ
உணர்வுக்கு உடனடித் தீர்வு கிட்டும்.
ஏற்கெனவே மறுபடியும் பிறந்தவர்கள் தம் பாவங்களை மட்டுமே அறிக்கைச்செய்யவேண்டும். எந்தவிதமான
பாவங்களை அவர்கள் செய்தாலும் அது ஏற்கெனவே இயேசுவால் கழுவப்பட்டுவிட்டதை அவர்கள் உறுதிச்
செய்கிறார்கள். 2000 வருடங்களுக்கு முன்னர் இயேசு ஞானஸ்நானம் பெற்று பாவிகளுக்காய் மரித்தமையால்
நாம் எத்தனை பலவீனர்களாக இருந்தாலும் நம்மின் எல்லாப் பாவங்களும் முற்றிலுமாக
கழுவப்பட்டுவிட்டன.
இன்று நாம் படித்த சொற்கள் நீதிமான்களுக்குச் சிறந்தது. ஆயினும் இவ்வசனத்தை பாவியொருவன்
தவறான வழியில் பயன்படுத்தினால், அவன் நரகத்தில் முடிவடைவான். ஆகவே, இவ்வசனங்கள் வேதாகம
வசனங்களில் அதிகமாக துஷ்பிரயோகப் படுத்தப்பட்டவையாகும். இது கிறிஸ்தவர்களை வெகு நாட்களாக தவறான
கருத்திற்குள் வைத்திருந்தது.
திறமை இல்லாத வைத்தியன் நோயாளியைக் கொல்கிறான் என்றொரு வாக்கியம் இருக்கிறது. ஒரு
திறமையில்லாத வைத்தியன், தன் தகுதிக்கு மீறி ஏதாவது செய்ய முயலும்போது அவன் நோயாளியைக்
கொல்கிறான்.
ஒருவன் தன்னுடைய கடமையை நன்றாகச் செய்யவேண்டுமானால் சிறந்த பயிற்சி பெற்றிருக்க
வேண்டுமென்பது வாழ்க்கையின் விதியாகும். இது விசுவாச உலகிற்கும் பொருந்தும்.
எழுதப்பட்டுள்ளபடி துல்லியமாகவும், தெளிவாகவும் தேவ வாக்கை போதிப்பவர்கள் நம்பிக்கையின்
உலகைப் பற்றி கூறவேண்டும். யாரெல்லாம் அவர்களிடமிருந்து கற்றார்களோ அவர்களுக்கு தாம்
கற்பிக்கப்பட்டவைகள் மீது விசுவாசம் இருக்க வேண்டும்.
தவறான கொள்கைகளை பின் பற்றுவோருக்கு ஒரு பிரசங்கி பிரசங்கம் செய்தாலோ அல்லது ஒரு விசுவாசி
வேதாகமத்தை தவறாக புரிந்துகொண்டாலோ அதன் முடிவு தீர்ப்பாக இருவருக்கும் நரகமானதாக இருக்கும்.
மறுபடியும் பிறந்தவர்கள் மட்டுமே வேதாகமத்தை சரியாக போதிக்கமுடியும். தவறாக
பரிந்துரைக்கப்பட்டால் நல்ல மருந்துகூட நோயாளிகளைக் கொல்லும். இது வேத வாக்கை போதிப்பதற்கும்,
படிப்பதற்கும் பொருந்தும். இது நம் வாழ்க்கையில் நெருப்பு எவ்வளவு முக்கியமானதோ அத்தனை
முக்கியமானது. சிறுவர்கள் கையில் தீயைக் கொடுத்தால் அது எத்தனை விபரீத விளைவுகளை ஏற்படுத்துமோ
அதுபோல் தவறான கைகளில் உள்ள வேதவாக்கு கொடிய விபத்துக்களை ஏற்படுத்தும்.
நீதிமானும் பாவியும் செய்யும் அறிக்கைகளில் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ளவேண்டும். 1 யோவான்
1:9 நீதிமான்களுக்குரியாதாகும். நீதிமான் ஒருவன் தன் பாவங்கள் குறித்து கர்த்தரின் முன்
விசுவாசத்துடன் அறிக்கைச் செய்தால் அவன் அவற்றிலிருந்து விடுதலையடைகிறான். ஏனெனில் இயேசு
2000வருடங்களுக்கு முன்பாகவே எல்லாப் பாவங்களையும் கழுவிவிட்டார்.
எப்பொழுதும் பாவ மன்னிப்புக்காக பாவிகள் ஜெபித்தபோதும், அவர்கள் பாவங்கள் கழுவப்பட்டன என்று
நம்புவது தவறானதாகும். மறுபடியும் பிறவாத ஒருவனின் பாவங்கள் அவன் பாவ அறிக்கைச் செய்வதால்
மட்டும் கழுவப்பட்டு விடுமா?
கர்த்தர் நீதியாயிருக்கிறார். தம்முடைய ஒரே பேரான குமாரனை இவ்வுலகத்திற்கு அனுப்பி இயேசுவின்
ஞானஸ்நானத்தின் மூலம் இவ்வுலகின் பாவங்களைச் சுமந்து தீர்க்கச்செய்து யாரெல்லாம் அவரின் ஞானஸ்நான
நீரையும், சிலுவையின் குருதியையும் விசுவாசிக்கிறார்களோ அவர்களை இரட்சிக்கிறார். ஆகவே ஒரு நீதிமான்
பாவ அறிக்கைச் செய்யும்போது கர்த்தர் அவன் பாவங்கள் 2000 வருடங்களுக்கு முன்பே கழுவப்பட்டதை
கூறுகிறார். அவன் சரீரம் பாவம் செய்தபோதிலும் அவன் இருதயத்தில் பாவங்கள் இல்லை என்பதை அவன்
நிரூபிக்கிறான். *